மின் சிக்கனத்தை கடைபிடிக்க தமிழகத்தில் துவங்கப்பட்ட, மானிய விலையில், சி.எப்.எல்., பல்பு வழங்கும் திட்டம், கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. வெப்பத்தை குறைக்க பல நாடுகள் மரங்களை வளர்க்கவும், மின் சாதனங்களால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. மின்சாரத்தின் மூலம் எரியும் குண்டு பல்புகளால் வெப்பம் அதிகரிப்பதோடு, மின்சார தேவையும் கூடுதலாகிறது. மின் உற்பத்தி செய்வதற்காக நாம் பயன்படுத்தும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் உண்டாகும் வெப்பம் மற்றும் கரியமில வாயுவும் ஓசோன் படலத்தை ஓட்டை விழச் செய்கிறது என்பதால், குண்டு பல்புகளை அகற்றி விட்டால் மின் சிக்கனத்துடன், புவி வெப்பமடைவதையும் ஓரளவு குறைக்கலாம்.
இத்திட்டத்தை, மத்திய அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டது. அதற்காக, முன் மாதிரியாக தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளுக்கு பதிலாக, சி.எப்.எல்., பல்புகளை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த பல்புகளை மின்சார வாரியம் மானிய விலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்காக, ஒவ்வொரு வீடுகளில் எத்தனை குண்டு பல்புகள் உள்ளன என்பது குறித்து மின்சார வரியம் சர்வே எடுத்து அரசுக்கு அனுப்பியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், சிதம்பரம் நகராட்சியில், சி.எப்.எல்., பல்பு மானிய விலையில் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டிய இத்திட்டம் சிதம்பரம் நகராட்சியை தவிர வேறு எங்கும் வழங்கப்படவில்லை. ஆறு மாதம் முடிந்தும் இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக