உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், பிப்ரவரி 28, 2011

கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறை மீன் பிடிக்க மீனவர்களுக்கு பயிற்சி

கடலூர் முதுநகர்:

                கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறைமீன் பிடிக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்தும், மீன் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிவகைகுறித்தும் மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் லட்சக்கணக்கான சூறை மீன்கள் உள்ளன.

                 மீனவர்கள் சாதாரண முறையை கடைபிடிப்பதால் வலைகளில் இந்த மீன்கள் அதிக அளவில் சிக்குவதில்லை.எனவே பிற மாநில, மற்றும் வெளிநாட்டு மீனவர்கள் அதிகம் பிடித்து செல்கின்றனர். எனவே தமிழக மீன்வளத்துறை நவீன முறையில் சூறைமீன் பிடிக்கும் பயிற்சி வகுப்புகளை கடலோர மீனவர்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.

                அதன்படி கடலூர் துறைமுக பகுதி மீனவர்களுக்கு 5 நாள் பயிற்சி வகுப்பும், 2 நாட்கள் ஆழ்கடலில் சென்று செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து கடலூர் துறைமுக பகுதியில் செய்வதற்காக மீன்வளத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
 
பின்னர் இது குறித்து 
மீன்வளத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன்ன் கூறியது:-

              மருத்துவ குணம் வாய்ந்த சூறை மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.1500 விலை போகிறது.முறையான பயிற்சி இல்லாததால் இந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை. பெரும்பாலும் வெளிநாட்டினர் அதிகளவில் விரும்பி உண்ணுவதால் நாட்டில் மீன்களின் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும். மீனவர்களும் நல்லமுறையில் பயனடைவார்கள். சென்னையில் உள்ள மீன்வளத்தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்துவரும் சிறப்பு அதிகாரிகள் மீனவர்களுக்கு பயிற்சி அளித்து இதற்கான மாதிரி நவீன உபகரணங்களை வைத்து செயல் முறை விளக்கம் கொடுப்பார்கள். பின்னர் இதனை மீனவர்கள் மானிய விலையில் வாங்கலாம். இவ்வாறு துணைஇயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior