உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், பிப்ரவரி 28, 2011

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல், தொடர்பியல் துறை தேசிய கருத்தரங்கம்

திட்டக்குடி : 
 
           தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. 

               நிர்வாக இயக்குநர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பொன்செல்வராஜ் வாழ்த்திப்பேசினர். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

புதுச்சேரி பொறியியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் தனஞ்செழியன் பேசியது: 

            மாணவர்கள் உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவில் தற்போது தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைக்கற்றை மூலம் செய்திகளை தங்கு தடையின்றி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பரிமாறிக்கொள்ள முடியும். இதுபோல மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக் கற்றையினை நாம் இந்தியாவிலும் பயன்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

               விழாவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனுவாசன் பொறியியல் கல்லூரிகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விரிவுரையாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior