உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

சிதம்பரம் அருகே போலி பல்பொடி தயாரிப்பு

 சிதம்பரம்:

               மதுரையில் உள்ள பிரபல பல்பொடி கம்பெனி பெயரில் சிதம்பரம் பகுதியில் போலி பல்பொடி விற்கப்படுவதாக அந்த கம்பெனிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பல்பொடி கம்பெனி நிர்வாகத்தினர் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

             இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் அருகே வயலூரில் அரசு போக்குவரத்து பணியாளர் குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் போலி பல்பொடி தயாரிக்கப்படுது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிரபல கம்பெனி பெயரில் போலி பல்பொடி தயாரித்த சிதம்பரம் அருகே புவனகிரி சின்ன தேவாங்க தெருவை சேர்ந்த நீலகண்டன் மகன் மகேஸ்வரன் (44) என்பவரை கைது செய்தனர்.

               மேலும் பல்பொடி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை மூல பொருட்கள், எசன்சுகள், 44 பெட்டிகளில் 500 பாக்கெட்டுகள் வீதம் தயாரித்து அடைக்கப்பட்டிருந்த போலி பல்பொடிகள், பேக்கிங் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். பிரபல கம்பெனி பெயரில் போலி பல்பொ தயாரித்து விற்கப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior