உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கடலூரில் நகராட்சியில் ஆறே மாதத்தில் பழுதடைந்த சிமெண்ட் சாலை


6 மாதத்திலேயே சிதைந்து கிடக்கும் கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோயில் சிமெண்ட் சாலை.
 
கடலூர்:
 
            கடலூரில் நகராட்சியால் போடப்பட்ட சிமெண்ட் சாலை, 6 மாதத்திóல் பழுதடைந்து வீணானது.  

              கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பெரும்பாலன சாலைகள் தோண்டப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இச் சாலைகள் தரமானதாகப் போடப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.  பொதுமக்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், பல சாலைகள் பழுதடைந்து வருகின்றன. கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோயில் சாலை பாதாள சாக்டைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு மிகவும் பழுதடைந்து போயிற்று. சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.  

              இதன் விளைவாக பகவதி அம்மன் கோயில் சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்துக் கொடுக்க, மாவட்ட ஆட்சியர் தனது சிறப்பு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிக் கொடுத்தார். 500 மீட்டர் நீளம் உள்ள இச்சாலை 6 மாதங்களுக்கு முன் நகராட்சியால் போடப்பட்டது. ஆனால் அச்சாலை அண்மையில் உடைந்து சேதம் அடைந்து விட்டது. சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த வடிகால் வாய்க்கால்களும் சேதம் அடைந்து விட்டன.  

              சிமெண்ட் சாலை அமைக்க நகராட்சி ஒரு கி.மீ. ரூ.60 லட்சம் செலவிடுகிறது. சிமெண்ட் சாலை 20 ஆண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும் என்று, கடலூர் நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இதுகுறித்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அறிவிக்கரசு கூறுகையில், 

              இச்சாலை அமைக்க இப்பகுதி மக்கள் கடுமையாக போராட்டம் நடத்தினர். எங்களது பரிதாப நிலையைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் தனது சிறப்பு நிதியில் இருந்து இங்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கினார். நகராட்சி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது.  சாலைப் பணிகள் நடக்கும்போதே பணி தரமாக இல்லை என்று சுட்டிக் காட்டினோம். அதுபோலவே 6 மாதத்துக்குள் வீணாகி விட்டது. இங்கு வடிகால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. சாக்கடை ஓடாமல் அடைபட்டுக் கிடக்கிறது. ஆனால் நகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.  




 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior