உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கடலூர் அரசு சேவை இல்ல பள்ளியில் கல்வி பயில பெண்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் : 

          கடலூர் அரசு சேவை இல்லத்தில் கல்வி பயில பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.
 
இதுகுறித்து கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் குமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 2011 - 12 கல்வியாண்டில் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சிக்கான சேர்க்கை இந்த அண்டு ஜனவரி முதல் நடக்கிறது. பெண்கள் மட்டுமே சேர முடியும். தையல் மற்றும் தட்டச்சு பயிற்சியில் சேர விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடப் புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், இருப்பிட வசதிகள் செய்து தரப் படும்.
 
           சேவை இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பெண்கள் 14 வயது பூர்த்தியடைந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குரூப் "பி' (பொது நர்சிங்) பிரிவில் இயற்பியல், உயிரியியல், வேதியியல், நர்சிங் பாடத் திட்டமும், குரூப் "சி'யில் வணிகவியல், கணிப்பொறியியல், பொருளியல், கணக்குப் பதிவியியல் பாடத் திட்டமும், குரூப் "டி'யில் (வக்கேஷனல் நர்சிங்) உயிரியியல், நர்சிங், நர்சிங் செய்முறை-1, நர்சிங் செய்முறை பாடத் திட்டமும் உள்ளது.
 
             தொழிற்பிரிவு - தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். சேவை இல்லத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை இலவசமாக அஞ்சல் மூலமாக அல்லது நேரில் கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
 
        மேலும், நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 72 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். நர்சிங் பிரிவு மாணவி மதுபாலா 1,005 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவ்வாறு கண்காணிப்பாளர் குமுதா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior