கடலூர்:
அக்னி நட்சத்திரத் தோஷம் நீங்க கடலூர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியது. இதனால் கடலூரில் கடும் வெயில் தகித்தது. பல நாள்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. மக்களை வாட்டி வதைத்த அக்கினி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. அக்கினி நட்சத்திர காலத்தில் மக்களுக்கு பலவேறு தோஷங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்ய கடலூர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு சிறப்பு பூஜை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை நடந்தது. 108 கலசங்களில் புனித நீர் ஊற்றி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு, பாடலீஸ்வரருக்கு அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மகாதேவ குருக்கள், நாகராஜ குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெகந்நாதன், செயல் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக