உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

14வது நெய்வேலி புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

           நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் 3வது இடத்தையும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் உள்ளது.

          ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரபல பதிப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆன்மிகம், அறிவியல், கலை, வரலாறு, சமையல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் இதில் இடம் பெறுகிறது. நெய்வேலி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும், மாணவர்களும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, வாங்கிச்செல்கின்றனர்.

              தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் மாணவர்கள், சிறுவர்களை கவரும் விதத்தில் விளையாட்டுகளும், அறிவியல் அரங்கங்களும் அமைக்கப்படும்.  இந்நிலையில் 14வது ஆண்டு புத்தக கண்காட்சி இன்று  ஜூலை 1 மாலை நெய்வேலி வட்டம் 11ல் உள்ள புத்தக கண்காட்சி திடலில் துவங்குகிறது. என்எல்சி நிறுவன தலைவர் அன்சாரி தலைமை தாங்குகிறார்.

           சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிவாணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைக்கிறார். சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர்மோகன் வாழ்த்துரை வழங்குகிறார். பண்ருட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் சிறந்த எழுத்தாளராக பாராட்டு பெறுகிறார். அவர் எழுதிய பிரபஞ்சங்களும் தாவரங்களும் என்ற புதிய நூல் வெளியிடப்படுகிறது.

            கண்காட்சியில் தினமும் ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும் பாராட்டப்படுவார்கள். மேலும் புதிய நூல்களும் வெளியிடப்படுகிறது. நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதை, கவிதை தொகுப்புகள் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா, பார்வையாளர்களுக்கு உடனடி திறன்போட்டியும் நடத்தப்படுகிறது.

                ரூ. 95 ஆயிரம் அளவுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. புகழ்பெற்ற கலைஞர்களின் நாடகம், பட்டிமன்றம், இலக்கிய பேருரைகள், இசை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. கண்காட்சி தினமும் காலை 11 மணிவரை இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கண்காட்சியை முன்னிட்டு உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை என்எல்சி புத்தக கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.





 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior