கடலூர் :  
                   இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம்  விளையாட்டுத் திடலில் வரும் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. 
முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
           டெக்னிக்கல் பதவிக்கு பிளஸ் 2வில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்  பாடப்பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும். சோல்ஜர் நர்சிங்  அசிஸ்டெண்ட் பதவிக்கு கணிதத்திற்கு பதில் உயிரியல் பாடம் தேவை. மதிபெண்கள் குறைந்தது 40 சதவீதம் இருக்க வேண்டும். மொத்தத்தில் 50 சதவீதம்  மதிப்பெண்கள்.  வயது 17 ஆண்டுகள் 6 மாதம் முதல் 23 வயது வரை. 165 செ.மீ.,  உயரமும் 50 கிலோ எடை. 77 - 82 செ.மீ.,  வரை மார்பளவு  இருக்க வேண்டும். 
இப்பதவிகளுக்கு வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வரும் 5ம் தேதி  தேர்வு செய்யப்படுவார்கள். 
             சோல்ஜர் ஜெனரல் பள்ளியிறுதித் தேர்வில் 45  சதவீதம். அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது 35 சதவீத மதிப்பெண்கள். வயது 17  ஆண்டுகள் 6 மாதம் முதல் 21 வயது. 166 செ.மீ., உயரம். 50 கிலோ எடை. 77 - 82  செ.மீ., மார்பளவு இருத்தல் வேண்டும். 
இப்பதவிகளுக்கு வேலூர், கடலூர்,  திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும்  புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வரும் 7ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். 
           சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பதவிக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி கலை  வணிகம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீதம்.  மொத்த  50 சதவீத மதிப்பெண்கள். வயது 17 ஆண்டுகள் 6 மாதம் முதல் 23 வயது வரை. 162  செ.மீ., உயரம், 50 கிலோ எடை. 77 - 82 மார்பளவு இருத்தால் வேண்டும். 
இப்பணிகளுக்கு வேலூர், கடலூர், திருவள்ளுவர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வரும் 8ம் தேதி  தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு காலை 5.30 மணிக்குள் ஆஜராக வேண்டும்.  
            இவ்வாறு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக