உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

கடலூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 1,047 பேர் ரத்ததானம் செய்துள்ளனர்: ஆட்சியர் அமுதவல்லி

கடலூர் : 

           கடலூர் மாவட்ட மக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்கொண்டார். 

              கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில் உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தையொட்டி ரத்ததான முகாம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. 

கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கி நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்சில் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசியது: 

              பொதுமக்களிடையே ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் வீதம் 2 நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்களில் ரத்ததானம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 60 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 172 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களும், பொது மக்களும் அதிக அளவில் ரத்ததானம் வழங்க வேண்டும். மேலும் இம் மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் 2,359 பேரும், 2011ம் ஆண்டில் 1,047 பேரும் ரத்ததானம் வழங்கியுள்ளனர்.

            இன்று தொடங்கப்பட்டுள்ள நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்சில் ஒரே நேரத்தில் 4 பேர் ரத்ததானம் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், துணை இயக்குனர் மீரா, காசநோய் பிரிவு துணை இயக்குனர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட மேற்பார்வையாளர் தங்க மணி நன்றி கூறினார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior