உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

இலவச மடிக்கணினி வழங்க மாவட்ட வாரியாக பிளஸ் 2 மாணவர்கள் பட்டியல் தயாரிப்பு

              அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

             இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக லேப்-டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி லேப்-டாப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் லேப்-டாப் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கிவிடும்.

             இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என பட்டியல் தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது.

              இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது.   பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் இன்னும் சேர்ந்து வருவதால் முழுமையாக கணக்கெடுத்து முடியவில்லை. ஆனால் பிளஸ்-2 வகுப்புக்கு கணக்கெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பு வாரியாக பள்ளி கல்வித்துறை அதிகாரி களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior