பண்ருட்டி : 
           பண்ருட்டி எம்.எல்.ஏ.,வின் மகனைத் தாக்கிய ஐந்து பேரை,  போலீசார் தேடி வருகின்றனர். 
            கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த,  தே.மு.தி.க., மாவட்ட செயலரான சிவக்கொழுந்து, பண்ருட்டி தொகுதி  எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது மகன் விஜி, 19. நேற்று முன்தினம் இரவு, 8.30  மணிக்கு, கடைவீதிக்கு சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  அவரது வீடு உள்ள ஜவகர் தெருவில், அ.தி.மு.க., பிரமுகர் சிவராமன் வீட்டின்  அருகே, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த, கம்பன் நகர் ரவி மகன் கோகுல்  மீது, விஜியின் கைப்பட்டது. ஆத்திரமடைந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள்  ஐந்து பேர், விஜியை வழிமறித்து, உரசியபடி ஏன் சென்றாய் என,கேட்டுத்  தாக்கினர். காயமடைந்த விஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விஜி  கொடுத்த புகாரின் பேரில், கோகுல் உட்பட ஐந்து பேரை, போலீசார்  தேடி  வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக