உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) தடுப்பு வேலி

கடலூர் : 

              கடலூர் சில்வர் பீச்சில் குளிப்பவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாலை நேரத்தில் ஏராளமான பொது மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் வாலிபர்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளித்து மகிழ்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுனாமிக்குப்பிறகு கடல் அலையில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அடிக்கடி சீற்றம் ஏற்படுவதுடன் திடீரென அலையில் சிக்கியவர்களை உள்ளிழுக்கவும் செய்கிறது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் அல்லாமல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குளிப்பதற்காக கடலில் இறங்குகின்றனர். 

               ஆழமில்லை என கருதி கடலில் சிறிது தூரம் சென்று விடுகின்றனர். அப்போது நீச்சல் தெரியாதவர்கள் திடீரென வரும் அலையில் சிக்கி இறக்க நேரிடுகிறது. எங்கிருந்தோ வருபவர்களெல்லாம் முகவரி தெரியாமல் மடிந்து விடுகின்றனர். இதைத் தடுப்பதற்காக பரந்த கடற்கரையில் போலீசார் காவல் பணியில் காத்திருந்தும் பலனில்லை. இருப்பினும் ஏதாவது ஒரு மூளையில் இச்சம்பவம் நடந்து விடுகிறது. எனவே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடற்கரையில் குறிப்பிட்ட பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விட்டால் குளிப்பவர்களுக்கு இடையூறு இல்லாமலும், உயிரிழப்பு இல்லாமலும் தடுக்க முடியும். எனவே பல லட்ச ரூபாய் செலவில் சில்வர் பீச்சை அழகுபடுத்தும் அரசு தடுப்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior