உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் மருத்துவ அலுவலர், ஊழியர்களுக்கும் குறுந்தகவல் மூலம் வருகைப் பதிவு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், எஸ்.எம்.எஸ். மூலம் தினமும் பணி வருகைப் பதிவை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் முறை, செப்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார். 

கடலூர்  ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் முறை, 1-8-2011 முதல் அமல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

               இம்முறை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்த முறையை மேலும் விரிவு படுத்தி, மாவட்டத்தில் உள்ள மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவையும் எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பும் திட்டம் 1-9-2011 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பொதுமக்களின் வரவேற்புடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. 

              எனவே ஆசிரியர்கள் முன்னுதாரணமாக எஸ்.எம்.எஸ்.மூலம் வருகைப் பதிவினை அளித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களும் ஊழியர்களும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior