உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

வடலூரில் பள்ளிச் சிறுமி கடத்தல்


நெய்வேலி:
 
          வடலூரை அடுத்த தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகளை மர்ம நபர்கள் புதன்கிழமை கடத்திச்சென்றதாகத் தெரிகிறது.  இது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 
 
                 வடலூரை அடுத்த வானதிராயபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் ஆர். கனிதா(10). இச்சிறுமி வடலூர் ஆபத்ராணபுரத்தில் உள்ள திரிபுரணேனி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.  இந்நிலையில் சிறுமி புதன்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவதற்காக பள்ளி வாயிலில் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. நெடுநேரம் ஆகியும் சிறுமி வீடு வந்த சேராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று பார்த்துள்ளனர். 
 
                 ஆனால் அங்கிருந்து சிறுமி சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.  இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வியாழக்கிழமை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இப்புகாரை அடுத்து நெய்வேலி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவருகிறார். இருப்பினும் சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது நெய்வேலி டிஎஸ்பி மணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சிறுமியை கடத்தியது கடத்தல் கும்பலா அல்லது உறவினர்களா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior