அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 1025 உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில்,
’’உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வி மானிய கோரிக்கையின்போது 2011-2012-ம் ஆண்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1025 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.
கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட 10 பணியிடங்களை தவிர்த்து 1025 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிடலாம் என்று ஆணையிடப்படுகிறது. தேவையான விவரங்களை கல்லூரி கல்வி இயக்குனரிடம் பெற்று நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக