உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.

                   பின்னர் இத்திட்டம் மாநில அளவில் 306 கோயில்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது, தற்போது மேலும் 106 கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழகத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது,   கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கிவைத்தார், இந்து அறநிலைய இணை ஆணையர் ஜகநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மருதவாணன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், உள்ளீட்டோர் பங்கேற்றனர்.

             இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பெருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தில்லைக் காளியம்மன் கோயிலில் தினந்தோறும் திங்கள்கிழமை முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior