உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே திருவாடுதுறை ஆதினமடத்தில் தூக்கில் காவலாளி பிணம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/99cf8674-00b7-443e-8102-06659624c8f1_S_secvpf.gif
 
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே உள்ள மாலை கட்டி தெருவில் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் மேலாளர் கார்த்திகேயன். சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) காவலாளியாக இருந்து வந்தார். 2 பேரும் அந்த மடத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனர்.  

             காவலாளி கண்ணன் தினமும் அதிகாலையில் எழுந்து அந்த மடத்தில் உள்ள மெய்கண்ட தேவநாயனார் கோவில் பூஜைக்கு தேவையான மலர்களை மடத்தில் உள்ள நந்தவனத்தில் இருந்து பறித்து வருவது வழக்கம்.   இன்று காலையில் வெகுநேரமாகியும் கண்ணனை காணவில்லை. எனவே மடத்தின் மேலாளர் கார்த்திகேயன் காவலாளியை தேடி நந்தவனத்துக்கு சென்றபோது அங்கு உள்ள மரத்தில் கண்ணன் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

             இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருவாடுதுறை ஆதீன மடத்துக்கு விரைந்து சென்றனர். இடுப்பில் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்த கண்ணனின் உடலை மீட்டனர்.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
 
அதில் கிடைத்த தகவல்கள் :-   
 
                    தூக்கில் பிணமாக தொங்கிய கண்ணனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் தர்காசி. திருமணமாகாத இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியுடன் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தில் குடியேறினார். கண்ணனுக்கு திருவாடுதுறை ஆதீனம் மடத்தில் உடனடியாக காவலாளி வேலை கிடைத்துள்ளது.

                   தினமும் தனக்கு அளித்த வேலைகளை அவர் செய்து பொறுப்பாக வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த மடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலாளர் காத்திகேயனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனது. இதுபற்றி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது.   இதுபற்றி கார்த்திகேயன் கேட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராமர் இந்த மோட்டார் சைக்கிளை எடுத்ததை பார்த்ததாக கண்ணன் கூறியுள்ளார்.

                இதுபற்றி ராமரிடம் கார்த்திகேயன் கேட்டபோது தான் திருடவில்லை என அவர் மறுத்து விட்டார். அதன் பிறகு நேற்று மாலை கண்ணனையும், மேலாளர் கார்த்திக்கேயனையும், பால்வியாபாரி ராமர் திட்டியுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ஆதினமடத்தில் உள்ள நந்தவனத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணன் பிணமாக கிடந்துள்ளார். எனவே கண்ணன் சாவுக்கான உண்மையான காரணம் என்ன? அவரை யாரேனும் அடித்து தூக்கில் தொங்கவிட்டனரா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior