உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், செப்டம்பர் 14, 2011

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 68 லட்சம் பேர்

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆகும்.

            இந்தத் தகவல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரம்

             வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், பதிவு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

           மாநிலத்திலுள்ள 37 வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

           

2010-ம் ஆண்டில், 11 லட்சத்து 54 ஆயிரத்து 121 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 

             கடந்த மார்ச் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரத்து 248 ஆகும்.

                நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவினை ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் பதிந்து கொண்டனர்.

                   இத்தகைய முறையால், பிளஸ் 2 மாணவர்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 717 பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 962 பேரும் தங்களது பதிவினை ஆன்-லைன் மூலம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior