உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், செப்டம்பர் 14, 2011

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரிய மனு தள்ளுபடி

             சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அவருடன் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு மருத்துவக் கல்வி படித்தார்.

                   இந்த நிலையில் நாவரசு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 11.3.98 அன்று கடலூர் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஜான் டேவிட்டை 5.10.01 அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர் போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செசன்சு கோர்ட்டு பிறப்பித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து 20.4.11 அன்று உத்தரவிட்டது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் எஸ்தர் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தபோது, அவரது வயதை கருதாமல் பொது சிறையில் அடைத்துவிட்டனர்.

               சிறுவராக இருக்கும் ஒருவரை சிறுவர் சீர்திருத்தச் சட்டப்படி பொது சிறையில் அடைக்கக் கூடாது. சிறுவர் இல்லங்களில்தான் வைக்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவரைத்தான் பொது ஜெயிலில் அடைக்க முடியும்.
எனவே ஜான் டேவிட்டை பொது சிறையில் அடைத்தது சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தை மீறியதாகும். சட்டவிரோத காவலில் அவரை போலீசார் அடைத்திருந்தனர். எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                 இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக எஸ்தர் தரப்பில் வக்கீல் குறிப்பிட்டார். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior