உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், செப்டம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில்அன்னதான திட்டம் துவக்கம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. இந்து அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். 

               அதன்படி  முதல் தமிழக கோவில்களில் விரிவாக்கப்பட்ட அன்னதான திட்டம் துவங்கியது. 

கடலூர் மாவட்டத்தில் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமி கோவில், 

சிதம்பரம் தில்லை காளி கோவில், 

நெய்வேலி வேலுடையான்பட்டு சுப்ரமணியசுவாமி கோவில், 

பெண்ணாடம் பிரளய காளேஸ்வரி கோவில், 

திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவில் 

            என 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலர் குமார், ஜெ.,பேரவை நகர செயலர் கந்தன், ஒன்றிய செயலர் பழனிச்சாமி, கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். 

               அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் இதுவரை 64 ஆயிரத்து 300 ரூபாய் நன்கொடை வழங்கியுள்னர். இதில் கடலூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா 5,000 ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம்: தில்லை காளி கோவிலில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அலுவலர் சிவக்குமார், திருவந்திபுரம் கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி: வேலுடையான்பட்டு கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தனர். என்.எல்.சி., செயல் இயக்குனர் சிவஞானம், அ.தி.மு.க., தொழிற் சங்க பிரமுகர்கள், ஜெ., பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior