உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பாதிரிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதிரிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 04, 2011

கடலூர் மருத்துவக் கல்லூரியை நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத்

கடலூர் : 

              ""கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை பொதுமக்களின் வசதிக்காக நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் கூறினார். 

இதுகுறித்து அ.தி. மு.க., வேட்பாளர் சம்பத் கூறியது: 

             அ.தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்றால் கடலூரில் தரமின்றி நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி தரமாக அமைக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கவும், நகர மேம்பாட்டை கருத்தில் கொண்டு கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொலைநோக்கு பார்வையோடு குடிநீர் திட்டங்களை கொண்டு நகராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், மீன்களை இருப்பு வைக்க குளிர்பதன குடோன் அமைக்கப்படும். 

              கடலூர் நகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தி முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் ஜெ., அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் விடுதி வசதியுடன் ஏற்படுத்துவேன். மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலன் கருதி நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். 

                கடலூர் நகரையொட்டியுள்ள பாதிரிக்குப்பம், கோண்டூர், சாவடி, உண்ணாமலை செட்டிச்சாவடி, குண்டுஉப்பலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவேன். இவ்வாறு சம்பத் கூறினார்.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

கடலூ ரில் தலித் மாணவியின் பொறியியல் படிப்புக்கு உதவும் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு

கடலூர்:

                   கடலூர் தலித் மாணவியைத் தத்து எடுத்துள்ள கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, அவரின் பொறியியல் படிப்புக்கும் நிதிஉதவி அளித்து உள்ளது.

            கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த தலித் மாணவி கிருபாவதி. அவரது பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். கிருபாவதி தெருவிளக்கில் பாடங்களைப் படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 500-க்கு 472 மதிப்பெண் பெற்று இருந்தார்.  எனவே கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, மாணவி கிருபாவதிக்கு உதவிசெய்ய முன் வந்து, தத்து எடுத்துக் கொண்டது. எனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அவருக்கு கல்வி உதவித் தொகையாக இதுவரை ரூ. 25 ஆயிரம் செலவு செய்து உள்ளது.கிருபாவதி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்ததால், அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைத் தவற விட்டார். 

            எனவே பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட அவர், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் ஐ.டி. படிப்பைத் தேர்ந்து எடுத்து உள்ளார்.கிருபாவதிக்கு கடலூர் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு, பொறியியல் கல்லூரி படிப்புக்கானச் செலவையும் ஏற்க முன்வந்து உள்ளது. கூட்டமைப்பின் முயற்சியால் கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அவருக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 1.92 லட்சம் கல்விக் கடன் வழங்கி உள்ளது. முதலாம் ஆண்டுக்கான கட்டணம் ரூ. 48 ஆயிரத்தை வழங்கி விட்டது.எனினும் 4 ஆண்டுகளுக்கு விடுதி மற்றும் உணவுக் கட்டணத்துக்காகத் தேவைப்படும் ரூ. 50 ஆயிரத்தைக் கூட்டமைப்பு வழங்க முன்வந்து உள்ளது.

             இந்த உதவித் தொகையை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடந்தது. நிதிஉதவியை கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மாணவி கிருபாவதியிடம் வழங்கினார். இணைப் பொதுச் செயலர் பி.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் புருசோத்தமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

சின்னவாய்க்காலில் கழிவு நீர் நோய் பரவும் அபாயம்

 கடலூர் : 

             கடலூர் நத்தவெளி ரோடில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
                  கடலூர் நத்தவெளி ரோடு அருகே அகலமான சின்ன வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் திருவந்திபுரம் சாலைக்கு இணையாக பாதிரிக்குப்பத்தில் இருந்து   அரசு அச்சக கட்டடம் அருகே சாலையை கடந்து கெடிலம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் லட்சமி சோரடியா பள்ளி வரை நகராட்சியில் தூர் வாரப்பட்டு உள்ளது. மீதியுள்ள பகுதி தூர் வாராத  காரணத்தால் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் வாய்க்காலில் அடைத்துக் கொண்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் நத்தவெளி சாலை அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. பாதிரிக்குப்பத்தில் இருந்து வரும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

கால்நடை மருத்துவ முகாம்

கடலூர் :

              கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

                      மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பாதிரிக்குப்பம் ஊராட்சி  மற்றும் நவகாளியம்மன் ஆலய சேவா சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு  ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செந் தில்முருகன் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை  துவக்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிவலிங்கம், கவுன்சிலர்கள் ஜோதி தமிழ்ச்செல்வன், செல்வி குமார் பங்கேற்றனர். சிறந்த கால்நடைகளுக்கு திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு பரிசு வழங்கினார். ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, மார்ச் 19, 2010

ஆண்டு விழா

கடலூர்:

                 கடலூர் பாதிரிக்குப்பம் அருணா மழலையர் தொடக்கப் பள்ளியில்  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு  அரிசிபெரியாங்குப்பம்  ஊராட்சி மன்றத் தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். வில்வமணி முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக  கடலூர் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் தியாகராஜன், உலக தமிழ் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் சீத்தா பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளின்  கலை  நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தாளாளர் லட்சுமி, தொல் காப்பியன், பள்ளி முதல்வர் வசந்தி, ராஜகுமாரி  உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், மார்ச் 18, 2010

சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

கடலூர்:

                மளிகை கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். கடலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர்கள் பிரகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் கடலூர், பாதிரிக்குப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 23, 2010

மின்சாரம் பாய்ச்சி ஆசிரியர் குடும்பத்தை கொல்ல முயற்சி : கடலூரில் மூன்றாவது சம்பவத்தால் மக்கள் பீதி

கடலூர் : 

                    மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்து ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூர் மக்களை பீதியடையச் செய்துள்ளது.

                   கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரெஜிஸ்(48). கடலூர் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூபலா சகாய ராணி(39) புலியூர் காட்டுசாகை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ரூபலா சகாய ராணி நேற்று காலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்தின் இரும்பு கேட்டை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அலறல் சத் தம் கேட்டு வந்த ரெஜிசை, கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறி ரூபலா சகாய ராணி தடுத்தார்.உஷாரான ரெஜிஸ் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து விபரத்தை கூறினார். அவர்கள் பார்த்தபோது, தெரு மின் கம்பத்தில் இருந்து கம் பியை ரெஜிஸ் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேட்டில் இணைப்பு கொடுத்திருப்பதை கண்டு திடுக் கிட்டனர்.

                    தகவலறிந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண் டித்தனர். திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். ஆசிரியர் ரெஜிஸ் புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடலூர் கேப்பர் மலை மற்றும் எம்.புதூர் கிராமத்தில் இரண்டு வீடுகளில் இதேபோன்று மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தது. அதிஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆசிரியர் ரெஜிஸ் வீட்டில் நேற்று நடந்திருப்பது மூன்றாவது சம்பவமாகும். இந்த மூன்று குடும்பத்தினரும், தங்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எதிரிகள் யாரும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் சைக்கோ ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவங்களால் கடலூர் மக்கள் பீதியில் உள்ளனர்.

Read more »

திங்கள், பிப்ரவரி 22, 2010

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

கடலூர் : 

              கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் கடலூர் : கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
                நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

பஸ் நிலையத்தில் நகை அபேஸ்

கடலூர் : 

                 கடலூர் பஸ் நிலையத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் அன்பு நகரைச் சேர்ந்த ஜெயபாலன் மனைவி கஸ்தூரி(60). இவர் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பாதிரிக்குப்பம் பஸ் ஏறினார். அப்போது அவரது பையில் இருந்த மணி பர்சை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன மணி பர்சில் 5 சவரன் செயின் மற்றும் ஒரு சவரன் வளையல் இருந்துள்ளது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior