கடலூர் :
கடலூர் நத்தவெளி ரோடில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் நத்தவெளி ரோடு அருகே அகலமான சின்ன வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் திருவந்திபுரம் சாலைக்கு இணையாக பாதிரிக்குப்பத்தில் இருந்து அரசு அச்சக கட்டடம் அருகே சாலையை கடந்து கெடிலம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் லட்சமி சோரடியா பள்ளி வரை நகராட்சியில் தூர் வாரப்பட்டு உள்ளது. மீதியுள்ள பகுதி தூர் வாராத காரணத்தால் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் வாய்க்காலில் அடைத்துக் கொண்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் நத்தவெளி சாலை அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. பாதிரிக்குப்பத்தில் இருந்து வரும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
downlaod this page as pdf