உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கடலூ ரில் தலித் மாணவியின் பொறியியல் படிப்புக்கு உதவும் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு

கடலூர்:

                   கடலூர் தலித் மாணவியைத் தத்து எடுத்துள்ள கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, அவரின் பொறியியல் படிப்புக்கும் நிதிஉதவி அளித்து உள்ளது.

            கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த தலித் மாணவி கிருபாவதி. அவரது பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். கிருபாவதி தெருவிளக்கில் பாடங்களைப் படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 500-க்கு 472 மதிப்பெண் பெற்று இருந்தார்.  எனவே கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, மாணவி கிருபாவதிக்கு உதவிசெய்ய முன் வந்து, தத்து எடுத்துக் கொண்டது. எனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அவருக்கு கல்வி உதவித் தொகையாக இதுவரை ரூ. 25 ஆயிரம் செலவு செய்து உள்ளது.கிருபாவதி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்ததால், அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைத் தவற விட்டார். 

            எனவே பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட அவர், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் ஐ.டி. படிப்பைத் தேர்ந்து எடுத்து உள்ளார்.கிருபாவதிக்கு கடலூர் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு, பொறியியல் கல்லூரி படிப்புக்கானச் செலவையும் ஏற்க முன்வந்து உள்ளது. கூட்டமைப்பின் முயற்சியால் கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அவருக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 1.92 லட்சம் கல்விக் கடன் வழங்கி உள்ளது. முதலாம் ஆண்டுக்கான கட்டணம் ரூ. 48 ஆயிரத்தை வழங்கி விட்டது.எனினும் 4 ஆண்டுகளுக்கு விடுதி மற்றும் உணவுக் கட்டணத்துக்காகத் தேவைப்படும் ரூ. 50 ஆயிரத்தைக் கூட்டமைப்பு வழங்க முன்வந்து உள்ளது.

             இந்த உதவித் தொகையை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடந்தது. நிதிஉதவியை கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மாணவி கிருபாவதியிடம் வழங்கினார். இணைப் பொதுச் செயலர் பி.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் புருசோத்தமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior