உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

மின்சாரம் பாய்ச்சி ஆசிரியர் குடும்பத்தை கொல்ல முயற்சி : கடலூரில் மூன்றாவது சம்பவத்தால் மக்கள் பீதி

கடலூர் : 

                    மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்து ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூர் மக்களை பீதியடையச் செய்துள்ளது.

                   கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரெஜிஸ்(48). கடலூர் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூபலா சகாய ராணி(39) புலியூர் காட்டுசாகை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ரூபலா சகாய ராணி நேற்று காலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்தின் இரும்பு கேட்டை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அலறல் சத் தம் கேட்டு வந்த ரெஜிசை, கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறி ரூபலா சகாய ராணி தடுத்தார்.உஷாரான ரெஜிஸ் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து விபரத்தை கூறினார். அவர்கள் பார்த்தபோது, தெரு மின் கம்பத்தில் இருந்து கம் பியை ரெஜிஸ் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேட்டில் இணைப்பு கொடுத்திருப்பதை கண்டு திடுக் கிட்டனர்.

                    தகவலறிந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண் டித்தனர். திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். ஆசிரியர் ரெஜிஸ் புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடலூர் கேப்பர் மலை மற்றும் எம்.புதூர் கிராமத்தில் இரண்டு வீடுகளில் இதேபோன்று மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தது. அதிஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆசிரியர் ரெஜிஸ் வீட்டில் நேற்று நடந்திருப்பது மூன்றாவது சம்பவமாகும். இந்த மூன்று குடும்பத்தினரும், தங்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எதிரிகள் யாரும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் சைக்கோ ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவங்களால் கடலூர் மக்கள் பீதியில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior