சிதம் பரம், நவ.25:
சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் அதிகமான மாணவர்களை ஏற்றிச் சென்ற 20-க்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிதம்பரத்தை அடுத்த பெரியப்பட்டு அருகே திங்கள்கிழமை 47 மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.27 பேர் படுகாயம் அடைந்தனர். இவ் விபத்தை தொடர்ந்து சிதம்பரம் கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம், வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் ஆகியோர் சிதம்பரம், புவனகிரி பகுதியில் தனியார் பள்ளி வேன்களை நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது போதிய ஆவணங்கள் இல்லாமலும், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் சென்ற 20 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக