சிதம்பரம், நவ. 25:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் தமிழ் மற்றும் மொழியியல் துறைத் தலைவர் பழ.முத்துவீரப்பன் தலைமை வகித்தார். நூலகத்துறை தலைவர் எம்.நாகராஜன், சமூகவியல் துறைத் தலைவர் டி.செல்வராஜ், தோட்டக்கலைத்துறை தலைவர் கே.மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஜெயராஜ் செய்திருந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக