உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

ஆக்​கி​ர​மிப்​பில் இருந்த முரு​கர் கோயில் அகற்​றம்

பண் ​ருட்டி,​ நவ.25: ​

ஓடை புறம்​போக்கு இடத்​தில் கட்​டப்​பட்​டி​ருந்த முரு​கன் கோயிலை வரு​வாய்த் துறை​யி​னர் போலீ​ஸôர் பாது​காப்​பு​டன் புதன்​கி​ழமை அகற்​றி​னர்.​ ​ ​

பண்​ருட்டி வட்​டம் மேலி​ருப்பு கிரா​மத்​தில் உள்ள ஓடை புறம்​போக்கு இடத்​தில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்​த​வர்​கள் குடிசை அமைத்து அதில் வேல் நட்டு கடந்த மூன்று ஆண்​டு​க​ளாக வழி​பட்டு வரு​கின்​ற​னர்.​ ​ ​ இந்​நி​லை​யில் அதே கிரா​மத்​தைச் சேர்ந்த பட்​டா​பி​ரா​மன்,​ தனது நிலத்​துக்கு செல்​லும் வழி​யில் கோயில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்​டுள்​ள​தா​க​வும்,​ அத​னால் நிலத்​துக்கு சென்று வர முடி​ய​வில்லை என​வும்,​ எனவே வழி​யில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்​டுள்ள கோயிலை அகற்ற வேண்​டும் என வழக்கு தொடுத்​தி​ருந்​தார்.​ ​ ​ இந்த வழக்கை விசா​ரித்த மாவட்ட நீதி​பதி ஆக்​கி​ர​மிப்பை அகற்ற வரு​வாய்த் துறை​யி​ன​ருக்கு உத்​த​ர​விட்​டார். இதற்கு கிராம மக்​கள் எதிப்பு தெரி​வித்​த​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ ​ துணை வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் மனோ​க​ரன் ஆகி​யோர் கிராம மக்​க​ளி​டம் சம​ர​சம் பேசி வேறு இடத்​தில் கோயில் கட்​டிக் கொள்​ளும்​படி கூறி​யதை தொடர்ந்து,​ போலீ​ஸôர் பாது​காப்​பு​டன் ஆக்​கி​ர​மிப்​பில் இருந்த கோயிலை அப்​பு​றப்​ப​டுத்​தி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior