கடலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைகேட்கும் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார்.
கூட் டத்தில் பழைய மனுக்கள் 43 ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 10 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. புதிதாக 26 மனுக்கள் பெறப்பட்டன.சென்னை, ஓய்வூதியர்கள் இயக்குநர் அலுவலக துணை இயக்குநர் என்.ராமசாமி, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓய்வூதியர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக