தமிழ்நாடு வட்டக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர் யூனியனைச் சேர்ந்த ஊழியர்கள் கடலூரில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். பிரதம கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்களைக் காப்பாற்ற தமிழகத்தின் வீட்டுவசதித் தேவைகளை நிறைவேற்ற, கடன் வழங்க நிதி ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் வீட்டு வசதித் திட்டங்களை கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பணியாளர்களின் நிர்வாகச் செலவுகளுக்கு அரசு நிர்வாக மானியம் வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி அறிவிப்பால், ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட பிரதம சங்கங்களுக்கு வழங்க வேண்டும், பிரதச் சங்க்ப பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராகவேந்திரன் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். உண்ணாவிரதத்தை அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசினார். கடலூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ச.சிவராமன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார். ஜி.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக