உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

கட​லூர் மீன​வர்​கள் மீது ​இந்​திய ரோந்​துப் படை தாக்​கு​தல்

கட​லூர்,​ நவ. 25: ​ ​

கட​லூ​ரில் இருந்து மீன்​பி​டிக்​கச் சென்ற மீன​வர்​கள் இந்​திய கட​லோர பாது​காப்பு ரோந்​துப் படை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. ​

க​ட​லூரை அடுத்த தாழங்​குடா மீன​வர் கால​னி​யைச் சேர்ந்த மீன​வர்​கள் சுமார் 100 பேர் 20 பட​கு​க​ளில் வங்​கக் கட​லில் செவ்​வாய்க்​கி​ழமை மீன்​பி​டிக்​கச சென்​ற​னர். 12 கடல் மைல் தூரத்​தில் உள்ள பாறை பகு​தி​யில் வஞ்​ச​ரம் மீன் கிடைப்​ப​தால் அங்கு அவர்​கள் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​னர். ​காலை 10 மணி அள​வில் இந்​தி​யக் கட​லோ​ரக் காவல் படை​யி​னர் 3 ரோந்​துப் பட​கு​க​ளில் அங்கு வந்​த​னர். அவர்​கள் மீன​வர்​க​ளைப் பார்த்து பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ள​னவா?​ மீன்​பி​டிக்க உரி​மம் பெற்று இருக்​கி​றீர்​களா?​ 12 கடல் மைலுக்கு அப்​பால் வரக்​கூ​டாது ​ என்று கூறி மிரட்​டி​ன​ராம். கட​லோ​ரக் காவல் படை சிப்​பாய்​கள் வைத்து இருந்த,​ கிரிக்​கெட் மட்டை போன்ற கட்​டை​க​ளால் மீன​வர்​களை அடித்து விரட்​டி​ன​ராம். ​இ​தில் 10 பட​கு​க​ளில் இருந்த தாழங்​குடா மீன​வர்​கள் சீனு​வா​சன்,​ கோதண்​டம்,​ மனோ​கர்,​ ஞான​சே​கர்,​ அமிர்த​லிங்​கம்,​ முரு​கன்,​ அறி​வ​ழ​கன்,​ சுரேஷ்,​ ஆறு​மு​கம்,​ புண்​ணி​யக்​கோடி,​ செல்​வ​கு​மார்,​ சேகர்,​ மாரி,​ ஆறு​மு​கம்,​ அருள்​தாஸ்,​. செந்​தில்,​ சக்தி உள்​ளிட்ட 50-க்கும் மேற்​பட்​ட​வர்​கள் தாக்​கப்​பட்டு உள்​கா​யம் அடைந்​த​னர். ​உ​ட​ன​டி​யாக 20 பட​கு​க​ளில் இருந்​த​வர்​க​ளும் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்​த​னர் என்​றும் தாழங்​குடா மீன​வர்​கள் தெரி​வித்​த​னர். புதன்​கி​ழ​மை​யும் தாழங்​குடா மீன​வர்​கள் 10 பட​கு​க​ளில் பாறைப் பகு​திக்கு மீன் பிடிக்​கச் சென்று இருந்​த​னர். அவர்​க​ளை​யும் ரோந்​துப் படை​யி​னர் விரட்​டத் தொடங்​கி​னர். மீன​வர்​கள் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்​த​னர்,​.இச்​சம்​ப​வம் மீன​வர்​கள் மத்​தி​யில் கடும் கொந்​த​ளிப்பை ஏற்​ப​டுத்தி இருப்​ப​தாக தாழங்​குடா மீன​வர்​கள் குழு உறுப்​பி​னர் பிச்​சாண்டி தெரி​வித்​தார். இது​பற்றி காவல் துறை​யில் புகார் தெரி​விக்க விரும்​ப​விó​லலை. கார​ணம் ​ அவர்​கள் ​ நட​வ​டிக்கை எடுப்​பார்​கள் என்ற நம்​பிக்கை இல்லை. எனவே அனைத்து மீன​வர் கிரா​மங்​க​ளுக்​கும் தக​வல் கொடுத்து இருக்​கி​றோம். அனைத்து கிரா​மப் பஞ்​சா​யத்​து​க​ளும் வியா​ழக்​கி​ழமை கூடி முடிவு எடுக்​கும் என்​றார். ​பிச் ​சாண்டி: மீன​வர் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை மத்​திய அரசு கொண்டு வர இருக்​கி​றது. இதில் 12 கடல் மைலுக்கு அப்​பால் மீன்​பி​டிக்​கச் செல்​லக் கூடாது,​ மீறிச் சென்​றால் ரூ.9 லட்​சம் வரை அப​ரா​தம் விதிக்​கப்​டும்,​ அனைத்து மீன​வர்​க​ளும் லைசென்ஸ் பெற்று இருக்க வேண்​டும்,​ பட​கு​கள் அனைத்​தும் பதிவு செய்​யப்​பட வேண்​டும். மீன​வர்​கள் மீது அதி​கா​ரி​கள் எடுக்​கும் நட​வ​டிக்​கை​கள்​பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடி​யாது என்​றும்,​ அச்​சட்​டத்​தில் குறிப்​பி​டப்​பட்டு இருக்​கி​றது.. அதன் அடிப்​ப​டை​யில் இந்​தச் சட்​டம் நிறை​வேற்​றப்​பட்டு நடை​மு​றைக்கு வரும் முன்​பா​கவே,​ கட​லோ​ரக் காவல் படை​யி​னர் சட்​டத்தை பயன்​ப​டுத்​தத் தொடங்கி விட்​ட​னரோ என்ற சந்​தே​கம் மீன​வர்​கள் மத்​தி​யிóல் எழுந்​துள்​ளது. ​​ இது குறித்து தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் கூறு​கை​யில்,​ கட​லில் அமை​தி​யாக மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்த நமது மீன​வர்​கள் தாக்​கப்​பட்​டது கண்​ட​னத்​துக்கு உரி​யது. தீவி​ர​வா​தி​களை கண்​கா​ணிக்​கி​றோம் என்ற பெய​ரில்,​ மீன​வர்​க​ளையே தாக்​கு​வது வேதனை அளிக்​கி​றது. அடை​யாள அட்டை கேட்​கி​றார்​கள். இல்லை என்​றால் மீன​வ​ளத் துறை​தான் அதற்​குப் பொறுப்பு. 35 சத​வீ​தம் மீன​வர்​க​ளுக்​குத்​தான் இது​வரை அடை​யாள அடை வழங்கி இருக்​கி​றார்​கள் என்​றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior