உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

கட​லூர் மாவட்​டத்​தில் 2.63 லட்​சம் பேருக்கு ​எய்ட்ஸ் பரிசோதனை

கடலூர்,​ டிச. 1:​ 

        கட​லூர் மாவட்​டத்​தில் 2.63 லட்​சம் பேருக்கு எச்.ஐ.வி. நோய்க் கிரு​மி​கள் உள்​ள​னவா என்று ஆய்வு செய்​யப்​பட்​ட​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.

திங்​கள்​கி​ழமை உலக எய்ட்ஸ் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​ட​தை​யொட்டி கட​லூ​ரில் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு ஊர்​வ​லம் நடந்​தது. ஊர்​வ​லத்​தைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கூறி​யது:​

க​ட​லூர் மாவட்​டத்​தில் 2,63,091 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் நோய்​கி​ருமி உள்​ளதா என்று பரி​சோ​திக்​கப்​பட்​டது. இதில் 2056 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்​பது கண்​டு​பி​டிக்​கப்​பட்டு உள்​ளது.        அவர்​க​ளில் 125 பேர் குழந்​தை​கள் அவர்​க​ளி​லும் 58 குழந்​தை​கள் ஆத​ர​வற்​ற​வர்​க​ளாக உள்​ள​னர்.     

ஆ​த​ர​வற்ற எஸ்.ஐ.வி. குழந்​தை​கள் பரா​ம​ரிப்​புக்​காக எச்.ஐ.வி. கட்​டுப்​பாடு அறக்​கட்​ட​ளை​யில் இருந்து ரூ.1.59 லட்​சம் நிதி ஒதுக்​கப்​பட்டு உள்​ளது.       125 குழந்​தை​க​ளுக்கு மாதம் தலா ரூ.400 வீதம் உத​வித் தொகை வழங்​கப்​ப​டு​கி​றது.          70 பேருக்கு மொத்​த​மாக தலா ரூ.10 ஆயி​ரம் வழங்​கப்​பட்டு உள்​ளது. ​ ​

எச்.ஐ.வி. தொற்​று​நோய் உள்​ள​வர்​க​ளுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மையம் கட​லூர் அரசு தலைமை மருத்​து​வ​ம​னை​யில் செயல்​ப​டு​கி​றது.   எச்.ஐ.வி. தொற்று நோய் உள்​ள​வர்​க​ளுக்கு எதிர்ப்பு சக்​தியை அறி​யும் கருவி கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அடுத்த வாரம் செயல்​பட இருக்​கி​றது என்​றார் 

எய்ட்ஸ்​ நோயால் பாதிக்​கப்​பட்டு ஆத​ர​வற்​ற​வர்​க​ளாக உள்ள குழந்​தை​க​ளுக்கு இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட ஆட்​சி​யர் உத​வித் தொகை​களை வழங்​கி​னார். கட​லூர் மாவட்​டத்​தில் 3 நாள்​கள் பிர​சா​ரம் செய்​யும் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு பிர​சார ஊர்​தி​யை​யும் மாவட்ட ஆட்​சி​யர் கொடி அசைத்​துத் தொடங்கி வைத்​தார். எய்ட்ஸ் நோய் உறு​தி​மொழி எடுத்​துக் கொள்​ளப்​பட்​டது,​. ​

மாவட்​ டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ்,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​ எஸ்.நட​ரா​ஜன்,​ மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ஜெய​வீ​ர​கு​மார்,​ சுகா​தா​ரத்​துறை துணை இயக்​கு​நர் டாக்​டர் ஆர்.மீரா,​ மாவட்​டத் திட்ட அலு​வ​லர் ராஜு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior