திட்டக்குடி:
பெண்கள் நலனுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நீதிபதி ரமேஷ்பாபு பேசினார். திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பொன் மணி, தலைமை ஆசிரியர் தனமணி, பெண்ணாடம் சேர்மன் அமுதலட்சுமி முன்னிலை வகித்தனர். இளவரசன் வரவேற்றார். வக்கீல்கள் சங்க செயலாளர் பாபுராஜேந்திரன், மூத்த வக்கீல்கள் சோமசுந் தரம், சுப்ரமணியன் பேசினர்.
விழாவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ரமேஷ்பாபு பேசியதாவது:அதிக செலவு ஏற்படுமென நினைத்து ஏழை மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர தயங்குவதை தவிர்க்கவே, இலவச சட்ட உதவி மையம் இயங்கி வருகின்றது. இதற்கென நியமிக்கப்படும் வக்கீலுக்கு அரசே ஊதியம் வழங்குகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் பெற கோர்ட் மூலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்க வழி உள்ளது. பெண்களின் நலனுக் காக இயற்றப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சட்டத் தின் மூலம் கணவன், தந்தையால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் அதே வீட்டில் மீண்டும் வாழ போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். வரதட்சணையாக வழங்கிய சீர்வரிசையினை திரும்ப பெறலாம். மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும் அதிகளவு படித்து முன்னேறவும், சமூகத்தில் தனித்துவம் பெறவும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பேசினார். விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. வக்கீல் பழனியாண்டி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக