நெய்வேலி:
இருபது சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்தனர். என்.எல்.சி.,யில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக சொசைட்டி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். டில்லியில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ. டி.யூ.சி.,யின் கிளைச் சங்கமான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நெய்வேலி "க்யூ' பாலம் அருகே நடந்த உண்ணாவிரதத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். என்.எல்.சி., ஏ.ஐ.டி. யூ.சி., சங்க தலைவர் தண் டபாணி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பொன்னுசாமி முன் னிலை வகித்தனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கான்ட் ராக்ட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக