சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில் விடுமுறைக்குப்பின் நேற்று வகுப்புகள் துவங்கின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., யில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) கடந்த 28ம் தேதி மோட்டார் பைக்கில் சென்றபோது லாரி மோதி காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் ஆத்திர மடைந்த வெளி மாநில மாணவர்கள், மார்ச் 1ம் தேதி இரவு ரகளையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பயந்து ஓடிய மாணவர்கள் முத்தையா நகர் பாலமான் வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயன்ற போது சுமித்குமார் (22), முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20) ஆகியோர் சேற்றில் மூழ்கி இறந்தார். இதனால் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவம் தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.
இந்நிலையில் நேற்று 11ம் தேதி எம்.ஏ., எம்.எஸ்சி,. அனைத்து பாடப் பிரிவுகள், பி. எட், எம்.எட், பி.மியுசிக், எம்.மியுசிக், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை,. டி.பார்ம், பி.பார்ம், எம்.எஸ்.சி,. ஐ.டி., சப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், பி.இ., எம்.இ., ஆகிய பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக