உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

பயறுவகை பயிர்களுக்கு மானியத்தில் டி.ஏ.பி., பயன்பெற வேளாண் அதிகாரி வேண்டுகோள்


கிள்ளை:

                   பயறு வகைப் பயிர்கள் அதிக மகசூல் பெற டி.ஏ.பி., உரக்கரைசலை தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
வேளாண் உதவி இயக்குனர் தனசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


                      பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கு நல்ல திரட்சியான விதைகளை பெறவும், அதிக மகசூல் பெறவும் டி.ஏ.பி., கரைசலை அவசியம் தெளிக்க வேண்டும். பயறு வகைப் பயிர்கள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களுக்கு டி.ஏ.பி., ஒரு எக்டேருக்கு 25 கிலோ வீதம் 200 ரூபாய் மானியத்தில் தில்லைவிடங்கன், கிள்ளை, பிச்சாவரம், பி.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப் படுகிறது. தேவையான விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு  டி.ஏ.பி., உரத்தினை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior