கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,24,409 வீடுகள் கட்டப்படவுள்ளது. நடப்பாண்டில் 26,119 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது செங்கல் கற்களின் தேவை அதிகமாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் தொழில் தொடங்க வருவோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆகவே தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொடர்பான தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வருபவர்களுக்கு விளிம்பு தொகையாக பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதமும், இதர பிரிவினர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 5 சதவீதம் விளிம்பு தொகை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வோருக்கு 15 சதவீதம் மான்யம் வழங்கப்படுகிறது.
எனவே இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை கல்வி சான்று, இருப்பிடச்சான்று, சாதி சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு செங்கல் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக