கடலூர்:
மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழக அரசின் கைத்தறி துணிநூல் துறை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கைத்தறித் துணிகள் கண்காட்சி கடலூரில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்துப் பேசியது:
இக்கண்காட்சி நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கைத்தறித் துணி ரகங்கள், 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதில் விற்பனை இலக்கு ரூ. 35 லட்சம். கைத்தறித் துணிகளை வாங்குவதன் மூலம், ஒவ்வொரு நெசவாளர் வீட்டிலும் தீப ஒளி ஏற்றி வைக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அனவரும் கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
விழாவில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் மனோகரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டாசு விற்பனை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் சரவணபவா கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் புதன்கிழமை, பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கூட்டுறவு இணைப் பதிவாளர் இரா.வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கித் தனி அலுவலர் ந.மிருணாளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக