உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 22, 2010

எம்.பி. பதவியை திருமாவளவன் ராஜிநாமா செய்ய வேண்டும்: கார்த்தி ப.சிதம்பரம்

சிதம்பரம்:

                 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ்  விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.  

முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமானின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  

                    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாரப்பத்திரிகை ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தும், தமிழக முதல்வருக்கு பல ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், இது போல கூறியது என்னாலும், எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

                  எனவே உடனே அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 125 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது.  காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தமிழகத்தில் கூட்டணி குறித்து சோனியாகாந்திதான் முடிவு செய்வார்.  மாநில அரசு திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. மத்திய அரசால் எந்த திட்டங்களையும் மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்த இயலாது. தமிழகத்தில் தற்போது ஜேஎன்என் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதிஉதவியுடன் 600 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.  

                ரூ.  1-க்கு 1 கிலோ அரிசி, 100 நாள் வேலை திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் நிதிஉதவி பெற்றுதான் செயல்படுத்தப்படுகிறது.  திமுகவின் நிர்வாக பலம், அதிகார பலம் எங்களது கட்சிக்கு இல்லாவிட்டாலும், தமிழகத்தில் 45 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி, ராகுல்காந்தியின் நேரடி மேற்பார்வையில் 13 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளது.  காங்கிரஸ் கட்சி திமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.  

                         கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. டாக்டர் ப.வள்ளல்பெருமான், காரைக்குடி எம்எல்ஏ என்.சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  பின்னர் பஸ்நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி சிலையை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior