உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 22, 2010

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி மையத்தில் ஆன்லைன் மூலம் பாடவகுப்புகள்

சிதம்பரம்:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் 361 டிகிரி மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறிவியல் தொலைநோக்குப் பாதையான ஆன்லைன் மூலம் பாடத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.  

                   இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் அண்மையில் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, 361 டிகிரி மைண்ட் நிறுவன தோற்றுநர்கள் பி.ராம்மோகன், ரீட்டா ஆகியோர் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர். அப்போது தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உடனிருந்தார்.  

இது குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                         தொலைதூரக்கல்விப் பாடங்களை புதிய சகாப்தமாக 361 டிகிரி மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களின் நேரத்தின் தரத்தை வெளிக்காட்டும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ. பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ. ரீசோர்ஸ் மேனேஜ்மெண்ட் பாடங்களில் ஆன்லைன் மூலம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

                       361 டிகிரி மைண்ட் நிறுவனம் பாடங்களை எதிர்கால நிகழ்வுக்கு ஏற்ப ரிசர்ச் அன்ட் டெக்னாலஜி முறையில் பாடங்களை அமைக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கல்வி அமைப்பு அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த மேலாண்மை கல்வியை உலகளாவிய கோட்பாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்பத்துடன் திறம்பட தயாரித்து பாடங்களை நடத்துகிறது.  இந்த பாடங்களை கடந்த 2 ஆண்டுகளாக 5 நாடுகளைச் சேர்ந்த இருபது வகையான குடியுரிமைப் பெற்ற மாணவர்கள் படித்து மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளனர் என எம்.ராமநாதன்  தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior