சிதம்பரம் :
சிதம்பரம் நகருக்கு தண்ணீர் வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிதம்பரம் நகரின் கீழ் பகுதி மற்றும் அண்ணாமலை நகருக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வருகிறது. கொள்ளிடத்தில் இருந்து குழாய்கள் மூலம் சிதம்பரம் மானாசந்து, கனகசபை நகர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு நகருக்கு வினியோகம் செய் யப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து அண்ணாமலை நகருக்கு செல்கிறது.
சிதம்பரம் வரும் வழியில் இருந்த குழாயில் தொடர்ந்து பல இடங்களில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. முறையாக பராமரிப்பில்லாததால் இந்த நிலை பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. நேற்று சீர்காழி சாலையில் உசுப்பூர் என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குபு, குபுவென சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து தண்ணீர் வீணாகியும் கூட நடவடிக்கை இல்லை. சிதம்பரம் நகரில் மழைக்காலமாக இருந் தும்கூட மக்களுக்கு போதுமான அளவு தண் ணீர் வழங்க முடியாத நிலையில் வருகின்ற தண் ணீரும் இதுபோன்று வீணாவதால் மேலும் பற் றாக்குறைதான் ஏற்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக