உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

அவல நிலையில் பண்ருட்டி காவல் நிலையம்

பண்ருட்டி:

                    ஒழுகும் கட்டடம், தொங்கும் மின்சார வயர்கள், செல்லும் வழியில் மழை நீர் குட்டை என பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பண்ருட்டி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

                     சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவதிகையில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டது. காவல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் பத்திர பதிவுத்துறை, பொதுப்பணித் துறை (நீர் வளம்) அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வியாபார நிலையமாக இருந்தாலும் ரௌடி களின் அட்டகாசமும், குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுவதாலும், தினந்தோறும் ஏராளமானோர் புகார் அளிக்கவும், விசாரணைக்காகவும் வந்து செல்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையம் பழுதடைந்து உள்ளதால் மழைக் காலத்தில் ஒழுகுகிறது. 

                    இதனால் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், காவலர்கள் அமர்ந்து பணியாற்றவும் முடியாது. மேலும் இக்கட்டடத்தில் உள்ள மின்சார ஒயர்கள் கழன்று தொக்கிக்கொண்டு உள்ளன.காவல் நிலையம் முன் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல் நிலையத்துக்கு வரும் காவலர்கள், புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள் துள்ளி குதித்தும், நீரில் இறங்கியும் செல்கின்றனர். தேங்கிய நீரால் பாதிப்பு உள்ளதையும், காவல் நிலையத்திற்கு வருபவர்கள் சிரமப்படுவதை அறிந்திருந்தும் ஒரு வண்டி மண் கூட அடிக்க யாரும் முன் வரவில்லை.

                  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல் புயல் காரணமாக வழியில் விழுந்த மரம் நான்கு நாட்கள் ஆகியும் இன்னமும் அகற்றப்படவில்லை. விழுந்த மரத்தின் சில பகுதிகள் வழக்கு  சொத்தின் (பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதால் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்) மீது போடப்பட்டுள்ளன. இதனால் காவலர்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த இடமில்லை .பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அமைக்கப்பட்ட பண்ருட்டி காவல் நிலையமும், அதன் சுற்றுபுறமும் பாதுகாப்பின்றி அவல நிலையில் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior