கடலூர் :
கடலூர் மாவட்ட ஏரிகளில் வனக் கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்ட கருவேல மரங்கள் 2 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரத்து 825 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 197 ஏரிகள் உள்ளன. இவற் றில் 38 ஏரிகளில் வனக் கோட்டம் சார்பில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த கருவேல மரங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி கடலூர் செம்மண்டலம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. சென்னை தலைமை வன பாதுகாவலர் அசோக் சிங் சர்க்கார் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் துரைசாமி முன்னிலை வகித்தார். வனக்கோட்டத்தினர் பராமரித்து வரும் 38 ஏரிகளில், 36 ஏரியில் உள்ள கருவேல மரங்களை வன குத்தகைதாரர்கள் ஏலம் எடுத்துச் சென்றனர். மீதமுள்ள இரண்டு ஏரிகள் பஞ்சாயத்திற்கு ஏலம் விடப்பட்டது.
கருவேல மரங்கள் 2 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரத்து 825 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடலூர், விழுப்புரம், சேலம், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100க்கும் மேற்பட்ட வன குத்தகைதாரர்கள் கருவேல மரங்களை ஏலம் எடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுநகர் போலீசார் குவிக் கப்பட்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக