உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

கைத்தறி கண்காட்சி கடலூரில் தொடக்கம்

கடலூர்:

                     கைத்தறி அபிவிருத்தி ஆணையம், மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து கோ-ஆப்டெக்ஸ் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கைத்தறிக் கண்காட்சி கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

               கடலூர் டவுன்ஹாலில் தொடங்கப்பட்டு உள்ள இக்காண்காட்சி 15 நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள பட்டு, பருத்தி புடவை ரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், கைலிகள், கொசு வலைகள், ஆண்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

                 அனைத்து ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும். இக்கண்காட்சி மூலம் |10 லட்சம் மதிப்பிலான கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். தொடக்க விழாவுக்கு கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி தலைமை தாங்கி, கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி தொடங்கி வைத்தார். கைத்தறி மற்றும் துணிநூல் விற்பனை துறை உதவி இயக்குநர் மனோகர் முன்னிலை வகித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior