உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி விரிவாக்கம்

தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி
   
              தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

                 ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.இப்போது இந்த வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இந்த புதிய வசதியைத் தொடங்கி வைத்து ஆர்க்காடு வீராசாமி பேசியது:

                    மின் கட்டண வசூல் மையங்கள் பரவலாக இருந்தாலும் இறுதி நேரத்தில் கட்டணம் செலுத்த வருபவர்களே அதிகம். இதனால், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே தாழ்வழுத்த மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் முறை சென்னையில் 2008-ல் தொடங்கப்பட்டது. கோவை மண்டலத்துக்கு 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் இவ்வசதி விரிவுபடுத்தப்பட்டது.

              பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இதை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி செயல் வடிவம் பெற்றுள்ளது.ரூ. 3 கோடி செலவில் புதிய வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களை நிறுவி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இப்போது 7 வங்கிகளில் மட்டுமே இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக மேலும் பல வங்கிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளோம். 

                 அதேபோல குறிப்பிட்ட 50 அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இதுவும் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.மின் பற்றாக்குறையைப் போக்க கரும்புச் சக்கை, காற்றாலை ஆகியவற்றின் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

                 விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் மோட்டார் இணைப்பு தரும் அரசின் திட்டத்துக்கு கூடுதலாக 750 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதையும் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.இந்த நிகழ்ச்சியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் சி.பி.சிங், அரசு செயலர் டேவிதார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,
  
எங்கிருந்தும் செலுத்தலாம்! 

                 இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியால், தமிழகத்தின் எந்த ஒரு பகுதியில் உள்ள வீட்டுக்கும் எந்த இடத்தில் இருந்தும் கட்டணம் செலுத்தலாம். உதாரணமாக, மதுரையில் உள்ள ஒரு வீட்டின் மின் கட்டணத்தை சென்னையில் இருந்தவாறே கட்டலாம். கிராமப்புறங்களில் உள்ள பலர், வேலை நிமித்தமாக நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். தனது கிராமத்தில் உள்ள வீட்டின் மின் கட்டணத்தை - இணையதள வசதி உள்ள எந்தப் பகுதியில் இருந்தும் கட்டலாம்.

இணையதள முகவரி:


http://www.tneb.in/

https://www.tnebnet.org/awp/TNEB





 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior