குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வரைவு விதிமுறைகள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் www.tn.gov.in/schooleducation/ இணையதளத்திலும், பள்ளிக் கல்வித் துறையின் www.pallikalvi.in என்ற இணையதளத்திலும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இந்த விதிமுறைகளைப் பார்வையிட்டு தங்களது கருத்துகளை டிசம்பர் 20-ம் தேதிக்குள் அரசுக்குத் தெரியப்படுத்தலாம்.
இணை இயக்குநர் (உயர் கல்வி),
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம்,
சென்னை - 600006
என்ற முகவரிக்கு தங்களது கருத்துகளை அஞ்சலில் அனுப்பலாம்.
இமெயில் முகவரி: jdhssed@nic.in
0 கருத்துகள்:
கருத்துரையிடுக