உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 28, 2011

கடலூரில் ரூ.48.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்

கடலூர் :

          கடலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி 48.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றி வைத்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீசடன் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, பள்ளி என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 42 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கி சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மரியாதை செய்யப்பட்டது.

            தொடர்ந்து 48.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு துறையினர் சாகசங்கள் நிகழ்த்தினர். கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் (மாவட்ட வளர்ச்சி முகமை), எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச்செல்வன், டி.ஆர். ஓ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் அசோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிதம்பரம்: 

                ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதியும், நகராட்சியில் சேர்மன் பவுஜியாபேகமும் கொடியேற்றினர். தாசில்தார் காமராஜ், தில்லைகோவிந்தன் பங்கேற்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை மைதானத்தில் துணைவேந்தர் ராமநாதன் கொடியேற்றி என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
 
காட்டுமன்னார்கோவில்: 

            ஒன்றியத்தில் சேர்மன் ஜெயச்சந்திரனும், குமராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மாமல்லனும், பேரூராட்சியில் தலைவர் கணேசமூர்த்தியும், லால்பேட்டை பேரூராட்சியில் தலைவர் சபியுல்லாவும் கொடியேற்றினர்.

புவனகிரி: 

                மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தனலட்சுமி கலைவாணன் கொடியேற்றினார்.
 
பரங்கிப்பேட்டை: 

            ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் முத்து பெருமாள், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சியில் தலைவர் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.

பண்ருட்டி: 

            நகராட்சியில் சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி தலைமையில் கமிஷனர் உமாமகேஸ்வரி கொடியேற்றினார்.
 
விருத்தாசலம்: 

             ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகேசனும், நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் முருகனும் கொடியேற்றினர். கமிஷனர் திருவண்ணாமலை மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
 
 நெல்லிக்குப்பம்: 

            நகராட்சியில் சேர்மன் கெய்க்வாட் பாபு கொடியேற்றினார். கமிஷனர் புவனேஸ்வரி பங்கேற்றார்.
 
சிறுபாக்கம்: 

               மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர்கள் தமிழரசி, செல்வநாயகி முன்னிலையில் சேர்மன் சின்னசாமி கொடியேற்றினார். துணை சேர்மன் கல்யாணி பங்கேற்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior