உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழகத்தில் விரைவில் அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

             மிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அமரர் ஊர்தி கொண்டு வரப்பட்டு அதற்கு தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இறந்தவர்களை இலவசமாக எடுத்துச் செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் நகர திமுக சார்பில் 16 கால் மண்டபத் தெருவில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியது:

           இளைஞர்கள் எழுச்சியுடனும், மொழி உணர்வுடனும் இருக்க வேண்டும். கருணாநிதி தலைமையிலான ஆட்சியை மீண்டும் கொண்டு வர உறுதி எடுத்து கொள்ள வேண்டும். கருணாநிதி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வகுகிறார். 108 ஆம்புலனஸ் திட்டம் மூலம் இதுவரை 7 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

             கூட்டத்துக்கு நகர அவைத் தலைவர் எஸ்.கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், ராஜேந்திரகுமார், ஒன்றியச் செயலர்கள் இரா.மாமல்லன் (குமராட்சி), பூபாலன் (கீரப்பாளையம்), முத்துசாமி (காட்டுமன்னார்கோவில்), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை), ஜெயராமன் (புவனகிரி), நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior