உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 19, 2011

ரூ.16 லட்சத்துக்கு மேல் செலவு செய்வது நிரூபணமானால் 3 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க தடை

சிதம்பரம்:

               ரூ.16 லட்சத்துக்கு மேல் செலவு செய்வது நிரூபணமானால் தொடர்புடைய வேட்பாளர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என தேர்தல் செலவின பார்வையாளர் (செலவினங்கள்) ஜி.எம்.கேமை தெரிவித்தார்.

              கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 5 தொகுதிகளுக்கான தேர்தல் செலவினங்கள் பார்வையாளராக ஜி.எம்.கேமை நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செலவினங்கள் கணக்கீடு செய்வது குறித்த பயிற்சி கூட்டம் சிதம்பரம் நகர்மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் பார்வையாளர் (செலவினங்கள்) ஜி.எம்.கேமை தலைமை வகித்துப் பேசினார். 

தேர்தல் பார்வையாளர் (செலவினங்கள்) ஜி.எம்.கேமை பேசியது: 

               வேட்பாளர் செலவிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தையும் திரட்ட வேண்டும். எந்த தேதி, எந்த நேரம் இடம் குறித்து விடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்தாலோ பொதுமக்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும்.தேர்தல் செலவினங்கள் குறித்து அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவினங்களை கணக்கிட பல்வேறு நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

              தேர்தலில் பணபலம் துஷ்பிரயோகத்தை தடுக்க வேண்டும்.வழக்குகளின் நீதிமன்ற ஆதாரத்துக்கு விடியோ பதிவு முக்கியமானதாகும். எனவே அனைத்தையும் விடியோவில் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் வாக்குமூலம் பெறுவதையும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட எஸ்.பி., அஸ்வின் எம்.கோட்னீஸ், சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலர் எம்.இந்துமதி (கோட்டாட்சியர்), புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் எஸ்.கல்யாணம் (மாவட்ட வழங்கல் அலுவலர்), கடலூர் தொகுதி தேர்தல் அலுவலர் வி.முருகேசன் (கோட்டாட்சியர்),. குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் அலுவலர் நடராஜன் (தனி துணை ஆட்சியர்-முத்திரைத் தாள்), காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் அலுவலர் சி.வி.கேசவமூர்த்தி (உதவி ஆணையர், கலால்), மக்கள்-தொடர்பு அதிகாரி முத்தையன், தேர்தல் செலவினங்கள் கண்டறியும் குழுவினர், நிலைத்த கண்காணிப்புக் குழு, பறக்கும் படையினர், மீடியா மானிட்டரி குழுவினர், விடியோகிராபர்கள், போலீஸôர் உள்ளிட்டோர் இப்பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior