குறுகிய காலத்தில் பெறக்கூடிய தத்கல் பாஸ்போர்ட் முறையில் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் தத்கல் முறையில் விண்ணப்பிக்கும் கால அளவைக் குறைக்கவும், ஆள் பற்றாக்குறை காரணமாக அதிகமாக பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது நேர்காணலுக்கான நாள் முன்னதாகவே தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதன்படி நேர்காணலுக்கு வர வேண்டும். இது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே நேர்காணலுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டாம். மேலும் மருத்துவ சிகிச்சை, இறப்பு தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக